கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – ஐ.சி.எம்.ஆர்
In இந்தியா November 29, 2020 5:43 am GMT 0 Comments 1563 by : Dhackshala

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.
லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்த காணொலி கருத்தரங்கில் உரையாற்றிய அவர், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலைக்குள் நாட்டில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்து வரும் நாடுகளில் 60 சதவிகித நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
முகக்கவசங்களை துணியாலான தடுப்பூசி என்று குறிப்பிட்ட அவர், அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.