கொரோனா தடுப்பூசி – மாநில முதல்வா்களுடன் 11-இல் பிரதமர் ஆலோசனை
In இந்தியா January 9, 2021 4:47 am GMT 0 Comments 1344 by : Jeyachandran Vithushan

நாட்டில் கொரோனா தொற்று தடுப்பூசிகளை பயன்பாடு குறித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கோவக்ஸின் தடுப்பூசி மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
தடுப்பூசிகளின் செயல்பாடு, விநியோகம் உள்ளிட்டவை தொடா்பாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அடுத்த வாரம் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அப்போது நாட்டில் நிலவும் கொரோன நிலவரம், மற்றும் தடுப்பூசிகளை பயன்பாடுகுறித்து கலந்தாலோசிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.