கொரோனா தொற்று: உரிமை கோரப்படாத நிலையில் 12 பேரின் உடல்கள்!
In ஆசிரியர் தெரிவு December 7, 2020 5:00 am GMT 0 Comments 1687 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் இதுவரை அவர்களது உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உரிமை கோரப்படாமல் காணப்படும் உடல்கள் பெரும்பாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் என அறியமுடிகின்றது.
இருப்பினும் உரிமை கோரப்படாத உடல்களை அரசாங்க செலவில் தகனம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்வதற்கு முன் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், முஸ்லிம்களாக இருப்பதால், அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி தகனம் செய்ய வேண்டியிருப்பதால் உடல்களை ஏற்க மறுத்துவிட்டனர்.
இருந்தாலும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும், அடக்கம் செய்யப்படக்கூடாது என பரிந்துரைத்துள்ளது.
இந்த குழு அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்து இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் குறித்த தகன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.