கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 இலட்சத்தினை நெருங்குகின்றது!
In இங்கிலாந்து January 20, 2021 3:45 am GMT 0 Comments 1827 by : Benitlas

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்து 66 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 33 ஆயிரத்து 335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.