கொரோனா தொற்றின் எதிர்பாராத உயர்வு கவலையளிக்கின்றது – ஐரிஷ் சுகாதார அதிகாரி
In இங்கிலாந்து November 15, 2020 7:02 am GMT 0 Comments 2095 by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொற்றின் எதிர்பாராத உயர்வு கவலையளிப்பதாக ஐரிஷ் சுகாதாரத் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த மாதம் நாடு தழுவிய ரீதியான கடுமையான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்த முதல் ஐரோப்பிய நாடுகளில் அயர்லாந்து ஒன்றாகும்.
அதன்படி COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாதத்தில் பாதிக்கும் மேலாக 0.6 ஆக குறைந்தது.
இருப்பினும் தற்போது தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை அன்று 456 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பொது சுகாதார அவசரக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களின் போக்குகளின் அடிப்படையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட சமீபத்திய நாட்களில் அதிக எண்ணிக்கையை கண்டிருக்கிறோம் என தலைமை மருத்துவ அதிகாரி டோனி ஹோலோஹன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.