கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தயாசிறி ஜயசேகர – மற்றுமொரு முக்கிய தகவல் வெளியானது!
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த 5ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு கடந்த 5ஆம் திகதி ஆரம்பமானது.
தாம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர தனக்கு அறிவித்ததன் பின்னர், நாடாளுமன்றத்திலுள்ள சி.சி.டி.வி கமராக்களை ஆராய்ந்ததில் அவர் நாடாளுமன்றத்திற்கு கடந்த சில தினங்களில் வருகைத் தரவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்தி செல்வதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.