கொரோனா தொற்றுக்குள்ளான ஷானி அபேசேகர கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
In இலங்கை December 22, 2020 8:58 am GMT 0 Comments 1500 by : Dhackshala

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின்னர் அவர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர,கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.