கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் – சுதத் சமரவீர
In ஆசிரியர் தெரிவு December 26, 2020 11:58 am GMT 0 Comments 1584 by : Jeyachandran Vithushan

நாட்டில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் பிரித்தானியா அல்லது ஐரோப்பாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாறக்கூடும் என்பதனால் விரைவில் வைரஸிலிருந்து விடுபடுவது மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒருவர் புதிய கொரோனா பிறழ்வுக்கு ஆளானாரா என்பதை அடையாளம் காண்பது கடினம் என்றும் ஏனெனில் பெரும்பாலான கொரோனா தொற்று நோயாளர்கள் அறிகுறியற்றவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரண பி.சி.ஆர். சோதனையால் வைரஸின் விகாரத்தை வேறுபடுத்த முடியாது ஏறணும் மரபணுக்கூறுகளை ஆய்வு செய்வதிலிருந்து மட்டுமே அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொவிட்-19 வைரஸின் இரண்டாவது அலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறிய அவர்,மக்கள் ஒத்துழைப்பினை வழங்கினால் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.