கொரோனா தொற்றை விட விபத்தில் உயிரிழப்போரே அதிகம் – சமல் ராஜபக்ஷ
In இலங்கை November 21, 2020 3:54 am GMT 0 Comments 1848 by : Jeyachandran Vithushan

தினமும் வீதி விபத்துக்களினால் குறைந்தது எட்டு முதல் ஒன்பது பேர் வரை உயிழப்பதாக உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முறையே 2018 ஆம் ஆண்டில் 3,151 இறப்புகளும் 2019 ஆம் ஆண்டில் 2,889 மரணங்களும் பதிவாகியுள்ளதாக கூறினார்.
அதிவேகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வீதியில் சமிக்ஞைகளை பின்பற்றாமை போன்றவை விபத்துக்களில் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புபுக்களை விட விபத்துக்களால் தற்போது ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.