இங்கிலாந்தின் சில பகுதிகளில், கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு அடையாளம் காணப்பட்டது!
In இங்கிலாந்து December 14, 2020 8:55 pm GMT 0 Comments 2239 by : Kuruparan

கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது எனவும் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தப் புதிய மாறுபாட்டால் ஏற்படும் கோவிட் தொற்று நோய்கள், குறைந்தது 60 அளவிலான வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்து விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றனர்,” என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Health Secretary Matt Hancock) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது மோசமான நோய்ப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றோ அல்லது தடுப்பூசிகள் இனி இயங்காது என்றோ “பரிந்துரைக்க எதுவும் இல்லை” எனவும் சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட்டின் புதிய மாறுபாடு தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில்,நோய்கள் பரவுவதை துரிதப்படுத்தக்கூடும் என ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் அமைந்துள்ளதாக தெரிவித்த மாட் ஹான்கொக், கடந்த வாரத்தில், லண்டன், கென்ற், எசெக்ஸ் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் கூர்மையான, அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் ஹவுஸ் ஒவ் கொமன்ஸ் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
A new variant of Covid could be speeding up the spread of cases in parts of south east England, says Matt Hancock.
“இங்கிலாந்தின் தெற்கில் இந்த முக்கியமான மாறுபாட்டுடன் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம், அத்துடன் கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.”
“புதிய மாறுபாட்டின் காரணமாக இது எந்த அளவிற்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதன் காரணத்தை பொருட்படுத்தாமல் நாம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும், தடுப்பூசியை பயன்படுத்தும்போது துரதிர்ஷ்டவசமான இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த முற்றிலும் அவசியம்.”.
தற்போதைய கொரோனா வைரஸ் ஸ்வாப் சோதனைகள் புதிய மாறுபாட்டைக் கண்டறியும் என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி (England’s Chief Medical Officer Prof Chris Whitty) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட இந்த புதிய மாறுபாட்டை இங்கிலாந்து சோதனை ஆய்வகங்கள் பரிசீலனைக்கு எடுத்துள்ளன என பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் நிபுணர் பேராசிரியர் ஆலன் மெக்னலி (Prof Alan McNally, an expert at the University of Birmingham ) தெரிவித்துள்ளார். குறிப்பாக “இது குறித்து நாம் கடுமையாக இருக்கத் தேவையில்லை, அத்துடன் இது மிகவும் பரவும் என்றோ அதிக தொற்றை ஏற்படுத்தும் அல்லது ஆபத்தானது என்றோ அர்த்தமல்ல. ” ஒரு கண் வைத்திருக்க வேண்டிய ஒன்று இது”.
இதே வேளை “மாறுபாட்டை வகைப்படுத்துவதற்கும் அதன் தோற்றத்தை புரிந்து கொள்வதற்கும் பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது சாதாரண வைரஸ் பரிணாமம் என்பதால் திரிபு குறித்து அமைதியான மற்றும் பகுத்தறிவு முன்னோக்கை வைத்திருப்பது முக்கியம், மேலும் புதிய மாறுபாடுகள் வந்து காலப்போக்கில் வெளிப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் நிபுணர் பேராசிரியர் ஆலன் மெக்னலி விளக்கி உள்ளார்.
“இது மிகவும் தீவிரமானது , கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்பட வேண்டும், மேலும் வைரஸை விட வேகமாக முன் செல்லத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும்.” என வெல்கம் இயக்குனர் டொக்டர் ஜெர்மி ஃபர்ரர் (Director of Wellcome Dr Jeremy Farrar) குறிப்பிட்டுள்ளார்.
எல்லா “புதிய திரிபு” அல்லது “புதிய மாறுபாடுகளையும்” புரிந்து கொள்ள ஒரு எளிய விதி உள்ளது: வைரஸின் நடத்தை மாறிவிட்டதா என கேளுங்கள் ஏனெனில் எல்லா “புதிய திரிபு” அல்லது “புதிய மாறுபாடுகளையும்” புரிந்து கொள்ள ஒரு எளிய விதி உள்ளது என BBCயின் சுகாதார மற்றும் விஞ்ஞான செய்தியாளர் analysis james gallagher
வைரஸ்கள் எல்லா நேரத்திலும் உருமாறும் என்பதால் அவை என்ன செய்கின்றன என்பது மிகவும் முக்கியமானது,. இதுவரை எங்களுக்கு “பயம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் “பதில்” அல்ல.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இங்கிலாந்தின் தென்கிழக்கில் வேகமாக பரவுவதோடு “தொடர்புடையதாக இருக்கலாம்” என மாட் ஹான்கொக் கூறியுள்ளார்.
ஆனால் இது “உயர்வுக்கு காரணமாகிறது” என்று சொல்வதற்கு சமமானதல்ல, மேலும் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றயவருக்கு மிக எளிதாக பரவுவதாக உருவாகியுள்ளது எனவும் ஹான்கொக் கூறவில்லை. வைரஸுடன் எந்த தொடர்பும் இல்லாத காரணங்களுக்காக புதிய விகாரங்கள் மிகவும் பொதுவானதாகிவிடும்.
கோடையில் “ஸ்பானிஷ் திரிபு” தோன்றுவதற்கான ஒரு காரணம் சுற்றுலா. இந்த நிலையில் தற்போது எல்லா இடங்களிலும் முக்கியமான தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. ஆனால் இது எவ்வளவு முக்கியமானது என்பதை அறிய இன்னும் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இல்லை என james Gallagher கூறியுள்ளார்.
“பல வைரஸ்களில் உள்ள மரபணு தகவல்கள் மிக விரைவாக மாறக்கூடும், சில சமயங்களில் இந்த மாற்றங்கள் வைரஸுக்கு பயனளிக்கும் – இது மிகவும் திறமையாக கடத்த அனுமதிப்பதன் ஊடாகவும், அல்லது தடுப்பூசிகள் மூலம் அல்லது சிகிச்சையிலிருந்து தப்பிக்க அனுமதிப்பதன் மூலம் ஏற்படலாம். – ஆனால் இவ்வாறு ஏற்படும் பல மாற்றங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. என நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு வைராலஜி பேராசிரியர் ஜொனாதன் போல் (Prof Jonathan Ball, Professor of Molecular Virology at Nottingham University) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக “வைரஸின் புதிய மரபணு மாறுபாடு உருவாகி, இங்கிலாந்தின் பல பகுதிகளிலும், உலகெங்கிலும் பரவி வருகின்ற போதிலும், இது முற்றிலும் தற்செயலாக நிகழலாம். “ஆகையால், எந்தவொரு மரபணு மாற்றங்களும் நிகழும்போது அவற்றைப் படிப்பது முக்கியம், அவை வைரஸ் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பாதிக்கிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.