கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயற்படுகிறது- வெங்கய்யா நாயுடு
In இந்தியா November 17, 2020 9:03 am GMT 0 Comments 1358 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயற்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் வெங்கய்யா நாயுடு மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்மறை எண்ணங்களைக் களைந்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு ஊழல், வறுமை, ஏமாற்றுதல், பாகுபாடு முதலியவை இல்லாத புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும்.
இந்தியாவை வலுவாக்கும் அனைத்து முயற்சிகளிலும் இளைஞர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.
படிப்பறிவின்மையை ஒழிப்பதிலும், நோய்களைக் குணப்படுத்துவதிலும்,வேளாண்துறை சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், பாகுபாடு முதலிய சமூக அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும், ஊழலைக் களைவதிலும் இளைஞர்கள் வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.
கொரோனா தொற்று முதல் பருவ நிலை மாற்றம் வரையிலான பல்வேறு பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் புதுமையான தீர்வுகளைக் காண வேண்டும்.
மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அவர்களை மேம்படையச் செய்வதில் முழுமையான கல்வி அவசியம். இந்தியப் பாரம்பரியத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைந்த கல்வி முறையை ஏற்படுத்த வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களை தலைசிறந்த மையமாக உயர்த்துவதில் தனியார் துறை உள்ளிட்ட அனைவரும் ஈடுபட வேண்டும்.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயற்படுகின்றயுது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.