கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
In இந்தியா January 14, 2021 5:10 am GMT 0 Comments 1333 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 15 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 5 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே 1 இலட்சத்து 46 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.