கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு விரையும் உயர்மட்டக் குழு
In இந்தியா November 22, 2020 11:20 am GMT 0 Comments 1300 by : Dhackshala

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, உயர்மட்டக் குழுவை மேலும் நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், ஹிமாச்சல பிரேதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மூன்று பேர் கொண்ட உயர் மட்ட குழு விரைந்துள்ளன.
இந்த குழு, மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆலோசனைகள் வழங்கும்.
இதேபோன்று கடந்த வாரம், குஜராத், மணிப்பூர், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் மத்திய அரசின் உயர்மட்ட குழுக்கள் சென்றுள்ளன
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.