கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இலங்கை November 27, 2020 9:47 am GMT 0 Comments 1338 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 410பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 22,028பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 5,703பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.