கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 512பேர் குணமடைவு
In இலங்கை January 15, 2021 11:29 am GMT 0 Comments 1247 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 512 பேர், பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,259 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,899 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 6,389 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.