கொரோனா வைரஸ் பரவலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் – ஜே.வி.பி.
In இலங்கை November 11, 2020 8:11 am GMT 0 Comments 1463 by : Dhackshala

கொரோனா வைரஸ் பரவலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு பொதுமக்கள் மீதும் ஊடகங்கள் மீதும் அரசாங்கம் பழிபோட முயல்கின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான இருக்கமான திட்டங்கள் இல்லாததன் காரணமாக பொதுமக்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தருணத்தில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ள அவர், தற்போதைய நிர்வாகம் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தினை நிர்வகிப்பதற்கும் தவறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு பதில் அரசாங்கம் இந்த இக்கட்டான தருணத்தில் இலாபம் சம்பாதிக்க முயல்கின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.