கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு!
In இந்தியா February 3, 2021 3:05 am GMT 0 Comments 1255 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,778,206 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,461,706 குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 865 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.