கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 264 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!
In இலங்கை November 12, 2020 10:34 am GMT 0 Comments 1555 by : Dhackshala

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பதிவான 635 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி கொழும்பில் நேற்று மாத்திரம் 264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 136 பேரும் களுத்துறையில் 18 பேரும் இரத்தினபுரியில் 09 பேரும் புத்தளத்திலிருந்து நால்வரும் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
அதேபோல கண்டியிலிருந்து 25 பேரும் மாத்தறையிலிருந்து ஐவரும் காலியிலிருந்து 3 பேரும் ஹம்பாந்தோட்டையிலிருந்து இருவரும் புதிய கொரோனா நோயாளர்களுள் அடங்குகின்றனர்.
இதேநேரம், நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, பதுளை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.