கொழும்பில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது
In இலங்கை January 10, 2021 4:46 am GMT 0 Comments 1338 by : Dhackshala

கொழும்பு மாநகர சபை எல்லையில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
ஒட்டுமொத்த ரீதியில் மதிப்பிடும் போது நான்கிற்கு ஒரு நோயாளர் என்ற வகையில் குறைவடைந்துள்ளதாக ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு கொழும்பில் அன்றாடம் 375 முதல் 400 நோயாளர்கள் வரை பதிவாகினர். எனினும் தற்போது 90 முதல் 100 நோயாளர்கள் வரையே பதிவாகின்றனர் என அவர் மேலும் கூறினார்.
நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்றும் ஆனால் அதனூடாக கொழும்போ ஏனைய நகரங்களோ அபாயமற்றவை என்று அர்த்தமல்ல. நோய் அறிகுறியின்றி நோயாளர்கள் இருக்கின்றமையே அதற்குக் காரணமாகும் எனவும் ருவன் விஜயமுனி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் மாநக சபை எல்லையில் சில இடங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.