கொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை
In ஆசிரியர் தெரிவு November 30, 2020 4:12 am GMT 0 Comments 1793 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.
அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்று உறுதியான நோயாளிகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் சேவைகளைப் பெற மருத்துவ பீடத்தின் உதவியையும் ரோஸி சேனாநாயக்க நாடியுள்ளார்.
தற்போது கொழும்பில் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் 991 பி.சி.ஆர் சோதனைகளில் 249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியும்போது, அது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கொழும்பின் நிலைமையைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு தனியார் மற்றும் வெளிநாட்டு தரப்பினர்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள
-
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ராகவா லார
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுந
-
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வேறு நாடுகளுக்கு வி
-
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த சூப்பர் சிங்கர
-
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு உதவ, இராணுவ வீரர்