கொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து – சாரதிகளுக்கான அறிவிப்பு
In இலங்கை January 28, 2021 3:58 am GMT 0 Comments 1239 by : Dhackshala

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள சுதந்திரதின பேரணிக்கான ஒத்திகை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒத்திகை நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் இவ்வாறு போக்குவரத்து தடைசெய்யப்படும்.
இதேவேளை இந்த நாட்களில் தாமரைத் தடாகத்திற்கு அருகே வீதியின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் இந்த காலகட்டத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.