கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகள் நாளை விடுவிப்பு !

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை (திங்கட்கிழமை ) காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளது என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பொறளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனி வீதி ஆகிய பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதோடு கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களும் நாளைக் காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளமை குறிப்பிடதக்கது .
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.