கொழும்பு குண்டுவெடிப்புகளில் சுமார் 40 பேர் உயிரிழப்பு – UPDATE
கொழும்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சுமார் 300 பேர்வரை காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் பிரபல நட்சத்திர விடுதிகளில் இன்று காலை குண்டுவெடிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு குண்டுவெடிப்புகளில் 25இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
கொழும்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 25இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் இன்று காலை குண்டுவெடித்துள்ளது.
இந்நிலையில், இவற்றில் 25இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு, 160இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் பெருமளவு பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குவிக்கப்பட்டு பாரிய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.