கொழும்பு – கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று
In இலங்கை November 25, 2020 8:14 am GMT 0 Comments 1659 by : Dhackshala

கொம்பனித் தெருவில் ஒரேநாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் 458 கரோனா நோயாளிகள் பதிவாகினர். அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 259 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவர்களில் கொம்பனித் தெருவைச் சேர்ந்த 90 பேர் அடங்குவதாகவும் குறித்த செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.