கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை திறக்க அனுமதி: விஷேட கண்காணிப்பு
In இலங்கை November 16, 2020 9:16 am GMT 0 Comments 1669 by : Dhackshala

கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையம் என்பவற்றை சுகாதார நடைமுறைகளுடன் திறப்பதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு நடவடிக்கைககளை மேற்கொண்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றமை தொடர்பாக சாரதி மற்றும் நடத்துனர் இன்று கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கோரோனா வைரஸ் தாக்க காலப்பகுதியிலும் சேவையில் ஈடுபடுகின்ற சில பேருந்துகள் அதிக பயணிகளுடன் செல்வதாக முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதனை கண்காணிப்பதற்காகவே குழுக்களை நியமித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.