கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை சோதனை
In இலங்கை February 10, 2021 12:39 pm GMT 0 Comments 1222 by : Jeyachandran Vithushan

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் இன்று (புதன்கிழமை) சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு புதிய மகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக் கூடங்களில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.