கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்த ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி காலமானார்!

தெற்கு ஆபிரிக்க நாடான ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த நான்கு வாரங்களுக்குப் பிறகு, 52 வயதான டிலாமினி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மருத்துவமனையில் காலமானார் என்று அரசாங்க அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
முன்னர் ஸ்வாசிலாந்து என்று அழைக்கப்பட்ட ஈஸ்வதினியின் பிரதமராக டிலாமினி, ஒக்டோபர் 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்துவந்தார்.
தெற்கு ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய நாடான இது, உலகின் கடைசி முழுமையான முடியாட்சிகளில் ஒன்றாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.