கொவிட்-19 தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது? அமைச்சர்களுக்கிடையில் விஷேட சந்திப்பு!
In இங்கிலாந்து December 19, 2020 7:52 am GMT 0 Comments 1810 by : Anojkiyan

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இங்கிலாந்தில் மற்றொரு தேசிய முடக்கநிலையை தவிர்க்க நம்புகிறேன் என்று கூறிய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரும் எத்தனை பேருக்கு வைரஸை அனுப்புகின்றனர் என தெரியப்படுத்தும் பகுப்பாய்வு ஆர் எண், பிரித்தானியாவில் 1க்கு மேல் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், தெற்கு இங்கிலாந்தில் மேலும் மில்லியன் கணக்கான மக்கள் இப்போது கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்கின்றனர்.
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 90 சதவீத மருத்துவமனை படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், தேசிய சுகாதார சேவை, குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென்கிழக்கு இங்கிலாந்தில் கொவிட் ஒரு புதிய மாறுபாட்டின் பரவலை அரசாங்க விஞ்ஞானிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர். ஏனெனில் அதன் பரவல் குறித்து அதிகரிக்கும் கவலைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.