கொவிட்-19 பயணிகளுடன் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 51 விமானங்கள் வந்ததாக தகவல்!

ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு கொவிட்-19 நேர்மறைப் பயணிகளுடன் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 51 விமானங்கள் வந்ததாக பல்வேறு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவின் வழக்கமான அறிக்கையின்படி, விமானங்கள் கொவிட்-19 நேர்மறை பயணிகளுடன் நாட்டிலிருந்து தரையிறங்கும் அல்லது புறப்படும் மற்ற அனைத்து விமானங்களுடனும் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
51 விமானங்களில் 34 விமானங்கள் பல நாடுகளிலிருந்து வந்தன. 17 விமானங்கள் கனடாவின் பிற நகரங்களிலிருந்து வந்தன.
பன்னாட்டு விமானங்கள் பல கண்டங்களில் இருந்து வந்தன. குறிப்பாக கெய்ரோ, பிராங்பேர்ட், புவேர்ட்டோ வல்லார்டா மற்றும் சியாட்டிலிலிருந்து விமானங்கள் வந்தன.
உள்நாட்டில், கல்கரி, மொன்றியல், வன்கூவர், சாஸ்கடூன், சார்லோட்டவுன் மற்றும் கெலோனாவிலிருந்து கொவிட்-19 நேர்மறைப் பயணிகள் வந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.