க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: மாணவர்களுக்காக 40 விசேட பரீட்சை நிலையங்கள்
In இலங்கை February 24, 2021 6:46 am GMT 0 Comments 1225 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக 40 விசேட பரீட்சை நிலையங்களை அமைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி அமைக்கப்படும் குறித்த விசேட நிலையங்களுக்கு 50 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை எடுக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2021 மார்ச் 1 ஆம் திகதி முதல் மார்ச் 10 திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 622,352 பேர் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் 4513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் குறிபிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.