க.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
In இலங்கை December 3, 2020 6:42 am GMT 0 Comments 1764 by : Dhackshala

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரபரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் பரீட்சை நடைபெறும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.