சசிகலா கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் – வைத்திய நிர்வாகம்
In இந்தியா January 22, 2021 4:38 am GMT 0 Comments 1503 by : Krushnamoorthy Dushanthini

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, “ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது.
சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் சசிகலாவுக்கு உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 19ம் திகதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு சசிகலாவுக்கு நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சசிகலாவுக்கு ஐ.சி.யு.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது நுரையீரலில் தொற்று இருப்பது சிடி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுடன் இரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.