சஜித் தரப்பின் அழைப்பினை நிராகரித்தார் நவீன்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
நவீன் திஸாநாயக்கவின் சகோதரரான மயந்த திஸாநாயக்க இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்லமாட்டேன்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு எனது சகோதரருக்கு தேர்தலுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டார்.
எப்படி இருந்தாலும் அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது என்றே நம்புகின்றேன். 25 வருடங்களாக அப்பதவியில் இருப்பவர் இன்னும் பல வருடங்கள் இருப்பதற்கு முற்படுவார்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.