சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ரணில் எச்சரிக்கை
In இலங்கை December 25, 2020 8:32 am GMT 0 Comments 1607 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதின் ஊடாக அக்கொள்கலன்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றதென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுகாதார அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரின் உடலில் இருக்கும் வைரஸ் அழிவதில்லை. எனவே குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அவரின் உடலை வைத்திருக்கும்போது அக்கொள்கலன் சேதமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.