சடலங்கள் அடக்கம் – பிரதமரின் அறிவிப்பிற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் வரவேற்பு
In இலங்கை February 11, 2021 10:15 am GMT 0 Comments 1312 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறித்து இலங்கைகான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், கொவிட் 19 தொற்றுக்குள்ளான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உறவினர்களை இழந்தவர்கள் அவரின் மத சடங்குகளுக்கு அமைவாக மற்றும் சர்வதேச பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வாய்ப்பளித்து இது விரைவில் செயற்படுத்தப்படும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
Welcome Prime Minister Rajapaksa’s announcement in Parliament today on the burial of Covid 19 victims. Hope this is soon policy, allowing those sadly bereaved to follow their religious practices and international public health guidelines.
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) February 10, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமைக்கு அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் முன்னதாக பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.