சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பான அ.தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று
In இந்தியா December 14, 2020 6:51 am GMT 0 Comments 1442 by : Yuganthini

சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம், இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14ஆம் திகதி, மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தனர்.
இதன்படி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அ.தி.மு.க மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கின்றனர். அ.தி.மு.க மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள், பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.