சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவோம்: எடப்பாடி பழனிசாமி
In இந்தியா May 5, 2019 9:19 am GMT 0 Comments 2502 by : Yuganthini

நடைபெற்று முடிந்த பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், வரவிருக்கின்ற நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சட்டமன்ற இடைத்தேர்தல்ககள் தொடர்பில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சேலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“அ.தி.மு.க.வை பிளவுப்படுத்துவதற்கு தி.மு.க தலைவர் முனைகின்றமை தற்போது அம்பலமாகியுள்ளது.
மேலும் 22 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெறுவோமென கூறி வரும் தி.மு.க.வினர் எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.
ஆனாலும் உண்மையாக இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டமையால்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முனைவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இதேவேளை 22 சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே நிச்சயம் வெற்றி பெறும்” என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ