சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான விடுதி திறந்து வைப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோக விடுதி இன்று(வியாழக்கிழமை) வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடம் தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு இராணுவத்தினரின் நிர்மாணிப்பு பணியில் கட்டப்பட்டிருந்தது.
வட மாகாணத்திற்கான சட்டமா அதிபர் திணைக்கள விடுதியாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தினை சட்டமா அதிபர் தபேர டி லிபேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள நிர்வாக பிரிவு அதிகாரி உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிபதிகள் வவுனியா அரசாங்க அதிபர் வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.