சட்டவிரோதமாக மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
In இலங்கை November 12, 2020 3:05 am GMT 0 Comments 1645 by : Dhackshala

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதிலும் சட்டவிரோதமாக வெளியேறி ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி இந்தத் தடை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் ஒருவர் மேல் மாகாணத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்குள் பிரவேசித்தால், அவர் 15 நாட்களுக்கு பின்னரே அங்கிருந்து வெளியேற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.