சதித்திட்டக்காரர்களின் நோக்கம் குறித்து அறிய அனைவரும் உதவ வேண்டும்: சபாநாயகர்
In இலங்கை April 21, 2019 8:16 am GMT 0 Comments 2208 by : Yuganthini

நாட்டில் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ள சதித்திட்டக்காரர்களின் நோக்கம் குறித்து அறிய, அனைவரும் உதவ வேண்டுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வெடிப்பு சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே கருஜயசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளடன் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சோகத்தில் உள்ளனர். ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு பாரிய சம்பவத்தை நிகழ்த்திய சதித்திட்டக்காரர்களையும் அவர்களது நோக்கம் குறித்து அறிவதற்கான விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அமைதியாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்” என கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்