சந்திரயாண் – 2 விண்கலத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளியீடு!
In இந்தியா December 25, 2020 10:38 am GMT 0 Comments 1328 by : Krushnamoorthy Dushanthini

சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நிலவின் துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பில் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டுள்ளது.
சந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.