சபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்
In இந்தியா April 19, 2019 4:56 am GMT 0 Comments 2129 by : Yuganthini

சபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாமென தேர்தல் ஆணையகம், கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைபுரம் கோயில் மேல்சாந்திகள், பொறுப்பில் இருக்கும் காலத்தில் கோயிலைவிட்டு வெளியே செல்ல முடியாது.
ஆகையால் வாக்களிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளமையால் தங்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு மையம் அல்லது தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை ஏற்படுத்தித்தர வேண்டுமென கேரள உயர் நீதிமன்றத்தில், இவர்கள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த மனு மீதான வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நேற்று இவ்விடயத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் உள்ளவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கே தபால் ஓட்டு போட முடியும். சபரிமலை மேல்சாந்திகளுக்கு இந்த சலுகை வழங்க முடியாது.
அதேபோன்று, சபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாதென தேர்தல் ஆணையகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் மேல்சாந்திகள் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோடை விடுமுறைக்கு பின் பரிசீலிப்பதாக நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.