சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் இன்று(சனிக்கிழமை) தொடங்குகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரிசோதனை முடிவுகள், இணையம் ஊடாக முன்பதிவு இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா காரணமாக இன்று 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15ஆம் திகதி கோயில் நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து வாரத்தின் முதல் ஐந்து நாட்கள் 2,000 பக்தர்களுக்கும், இறுதி நாட்கள் 3,000 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று நடைபெறும் மண்டல கால பூஜைக்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஆரன் முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து 453 சவரன் தங்க அங்கி புறப்பட்டது.
நான்கு நாட்கள் பயணத்திற்கு பிறகு நேற்று மாலை திரு ஆபரண பெட்டி சபரிமலை கொண்டு வரப்பட்டு ஐயப்பருக்கு சாத்தப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப