சபரி மலையில் இந்து அமைப்பினர் மீண்டும் போராட்டம்
In இந்தியா April 14, 2019 3:48 am GMT 0 Comments 2485 by : Yuganthini

கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில அரசு சட்டவிரோதமாக வழக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறி இந்து அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
‘சபரிமலை கர்ம சமிதி’ அமைப்பின் தலைமையில் திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தின் முன்பு திடீரென நேற்று (சனிக்கிழமை) போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாலை மறியலிலும் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐயப்பன் உருவப் படத்தை வைத்து, சாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கேரளாவில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறள்ள நிலையில் இந்து அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை அமுல்படுத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
குறித்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.