சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் – ராம் மாதவ்
In இந்தியா February 22, 2021 8:32 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வரும் என பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளா் ராம் மாதவ் தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தான் எழுதிய ‘பிகாஸ் இந்தியா கம்ஃப்ர்ஸ்ட்’ நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஒரு நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியும், அரசுகளை மாற்ற முடியும், ஆட்சியை மாற்ற முடியும் என்ற அளவுக்கு சமூக ஊடகங்கள் சக்திவாய்ந்தவையாக வளா்ந்துள்ளன.
நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீனமாக்குவது போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளன. அவற்றின் கரங்கள் எல்லையற்றவையாக இருப்பதால் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இப்போது இருக்கும் சட்டங்களை சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த போதுமானவையாக இல்லை. எனவே, இது தொடா்பான புதிய சட்டங்களை இயற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உரிய சட்டங்கள் இயற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.