சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: உயர் நீதிமன்றம்
In இந்தியா April 24, 2019 7:25 am GMT 0 Comments 2346 by : Yuganthini

சமூக வலைத்தளங்கள் வணிகத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படாமல் சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகும் தகவல் பரவாமல் தடுக்கும் நோக்கில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க உத்தரவிட கோரி என்டனி கிளெமர் ஊபர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
குறித்த மனு மீதான வழக்கின் விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது தாங்கள் கேட்கும் தகவல்களை முழுமையாக சமூக வலைத்தளங்கள் வழங்குவதில்லையென சைபர் கிரைம் பொலிஸ் துறை தெரிவித்தது.
அந்தவகையில் மின்னஞ்சல் வழியாகவே பொலிஸ் துறை தகவல்களை கோருகின்றமையினால் அவற்றை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையகமான ட்ரோய் விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயங்கள் அனைத்தையும் கேட்டறிந்துகொண்ட நீதிபதிகள், சமூக வலைத்தளங்களிடமிருந்து தகவல்களை பெற ஏதுவாக குழு அமைக்கலாமா என கேள்வி எழுப்பியதுடன் சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.