சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது – கெஹலிய!

சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவாகும்.
அந்த முடிவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது. சவால்களை எதிர்கொள்ளும்.
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது.
கடந்த காலங்களில் 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.