சம்பியன்ஸ் லீக்: காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி!
In உதைப்பந்தாட்டம் April 17, 2019 6:26 am GMT 0 Comments 1816 by : Anojkiyan
ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன், லிவர்பூல் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கமைய இன்று இரண்டு லெக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் முதல் போட்டியில், டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணியும், மென்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள மென்செஸ்டர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இப்போட்டிக்காக இவ் இரு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபலமான டோட்டன்ஹாம் அணியை பொறுத்தவரை, அந்த அணி இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், மூன்று போட்டிகளில் வெற்றியையும், இரண்டு போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
அதேபோல, மென்செஸ்டர் சிட்டி அணி, இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், நான்கு போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.
இரு அணிகளும் இதுவரை 157 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 62 போட்டிகளில் டோட்டன்ஹாம் அணியும், 60 போட்டிகளில் மென்செஸ்டர் சிட்டி அணியும் வெற்றிபெற்றுள்ளன. 35 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
அத்தோடு இரு அணிகளும் இறுதியாக விளையாடிய நான்கு போட்டிகளில், மூன்று போட்டிகளில் மென்செஸ்டர் சிட்டி அணியும், ஒரு போட்டியில் டோட்டன்ஹாம் அணியும் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியை பொறுத்தவரை, கடந்த கால பெறுபேறுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாகவுள்ளது. அத்தோடு, இரண்டு அணிகளிலும் பலம் பொருந்திய முன்னணி வீரர்கள் உள்ளனர்.
ஆகவே இன்றைய போட்டியில் வெற்றியை மதிப்பீடுவது கடினம். எனினும், இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதேவேளை இரு அணிகளுக்கிடையில் இறுதியாக நடைபெற்ற காலிறுதி முதல் லெக் போட்டியில், டோட்டன்ஹாம் அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
……………..
இதேபோல இன்னொரு போட்டியில், போர்டோ அணியும், லிவர்பூல் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்துள்ள இப்போட்டியானது, எஸ்டாடியோ டோ ட்ரேகோவா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் இன்றைய போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் லிவர்பூல் அணியை பொறுத்தவரை, இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் அந்த அணி வெற்றிபெற்றுள்ளது.
போர்டோ அணி இறுதியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், மூன்று போட்டிகளில் வெற்றியையும், 1 போட்டியில் தோல்வியையும், 1 போட்டியில் சமநிலையையும் பதிவு செய்துள்ளது.
இதில் இரு அணிகளும் இறுதியாக விளையாடிய ஏழு போட்டிகளில் லிவர்பூல் அணி, நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
இந்த போட்டிகளின் அடிப்படையில், பெறப்பட்ட கோல்களை எடுத்துக்கொண்டால் போர்டோ அணி 2 கோல்களும், லிவர்பூல் அணி, 14 கோல்களும் அடித்துள்ளன.
இரு அணிகளை பொறுத்தவரை, இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளன. அத்தோடு, இரண்டு அணிகளிலும் பலம் பொருந்திய முன்னணி வீரர்கள் உள்ளனர்.
எனினும் இன்றைய போட்டியில், லிவர்பூல் அணியின் வெற்றி தொடருமா அல்லது போர்டோ அணி முட்டுக்கட்டை போடுமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இதேவேளை இரு அணிகளுக்கிடையில் இறுதியாக நடைபெற்ற காலிறுதி முதல் லெக் போட்டியில், லிவர்பூல் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.