சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரிய பா.ஜ.க.வின் பெண் சாமியார்
In இந்தியா April 20, 2019 10:23 am GMT 0 Comments 1969 by : Yuganthini

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பரப்பியமைக்கு மன்னிப்பு கோருவதாக பா.ஜ.க பெண் சாமியார் சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு விவகாரத்தில் தன்னை கைது செய்து சித்ரவதை செய்த கார்கரே, தனது சாபத்தினாலேயே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாரென பிராக்யா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கருத்துக்கு பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் சாத்வியின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லையென பா.ஜ.க அறிக்கையொன்றையும் வெளியிட்டது.
இந்நிலையில் குறித்த சர்ச்சையிலிருந்து விடுபடுவதற்காக, இன்று (சனிக்கிழமை) அனைத்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதுடன், நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்த வீரர் கார்கரே எனவும் சாத்வி பிராக்யா புகழாரம் சூடியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி