சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுப்பதாக ஆமிர் கூறியுள்ளார்.
எனினும் விரைவில் பாகிஸ்தான் செல்லும் அவர், இதுதொடர்பான முழுமையான தகவல்களை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரீயர் லீக் ரி-20 தொடரில், காலி கிளேடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடிய இடக் கை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், இன்று (வியாழக்கிழமை) தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற லங்கா பிரீயர் லீக் ரி-20 தொடரின் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், காலி கிளேடியேட்டர்ஸ் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணம் 2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம் வென்ற பாகிஸ்தான் அணியிலும் ஆமிர் இடம்பெற்றிருந்தார்.
குறிப்பாக இங்கிலாந்தில் வைத்து 2010ஆம் ஆண்டு ஸ்பொட் பிக்ஸிங் சூதாட்டத்தில் சிக்கி தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார்.
28 வயதான மொஹமட் ஆமிர், 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் 81 விக்கெட்டுகளையும் 50 ரி-20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.